திரையுலகில் அறிமுக நடிகர்களாக நூறுக்கணக்கானவர்கள் நுழைந்தாலும், அதில் வருடத்திற்கு யாரோ ஓரிருவரைத்தான் ஹீரோக்களாக அடையாளம் காட்டுகிறது சினிமா. அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு தொடர்ந்து ஹிட்டுக்களை கொடுப்பவர்கள் தான் முன்னணி ஹீரோக்களாக உயர்கிறார்கள். தமிழில் சமீபத்திய உதாரணங்களாக சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உருவானது போல, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி மூலம் கவனிக்க வைக்கும் ஹீரோவாக மாறியவர் விஜய் தேவரகொண்டா.
அடுத்து கூட்டு முயற்சி தான் என்றாலும் மகாநடி படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க, இதோ சமீபத்தில் வெளியான அவரது கீதா கோவிந்தம் படம் சூப்பர்ஹிட்டாகி வசூலை வாரி குவித்து வருகிறது. இதற்குமுன் வெளியான அவரது அர்ஜுன் ரெட்டியின் அமெரிக்க மொத்த வசூல் 1.7 மில்லியன் டாலர் தான்.
ஆனால் கீதா கோவிந்தம் படம் ஒரே வாரத்தில் 1.8 மில்லியன் டாலர் வசூலித்து, அர்ஜுன் ரெட்டியை ஓவர்டேக் செய்துள்ளது. இந்த ஓட்டத்தை கணக்கிட்டால், வரும் நாட்களில், படத்தின் வசூல் 2 மில்லியன் டாலர்களை தாண்டும் என்கிறார்கள்.
