இம்மாதம் 24, 25 ஆகிய இரு தினங்களில் ஹட்டன் சீடா மத்திய நிலையத்தில் நடைப்பெறவிருந்த பெருந்தோட்டப் பாடசாலை அதிபர்களின் பயிற்சிப்பட்டறை பிற்போடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவினால் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹங்குரன்கெத்த மற்றும் வலப்பனை கல்வி வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலை அதிபர்களுக்காக 2018-05-24 மற்றும் 2018-05-25 ஆகிய தினங்களில் ஹட்டன் சீடா கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடைபெறவிருந்த செயலமர்வு தற்போதைய சீரற்ற காலநிலையால் பிற்போடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி பட்டறை நடைப்பெறும் தினம் எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

