பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் சாஹோ. சுஜீத் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாசுடன் ஸ்ரத்தா கபூர், நீல்நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெரப் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் இப்போது இன்னொரு முக்கிய வேடத்திற்காக எவலின் ஷர்மா ஒப்பந்தமாகியுள்ளார். கவர்ச்சிகரமாக கெட்டப்பில் எவலின் ஷர்மா நடிக்கும் இந்த வேடம் இன்னொரு நாயகி போன்று உருவாகிறதாம். கதைப்படி பிரபாஸைத் தொடர்ந்து வரும் கதாபாத்திரம் என்பதால் இவர் நடிக்கும் காட்சிகளையும் உலகின் பல்வேறு நாடுகளில் படமாக்குகிறார்களாம்.













