கைதி எண் 150 படத்தை அடுத்து தற்போது சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சுதந்திர போராட்ட வீரராக நடிக்கும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கு சினிமாக்களில் நடித்த சில மூத்த நகைச்சுவை நடிகர்களுக்கு தனது சார்பில் பண உதவி செய்துள்ளார் சிரஞ்சீவி. அதாவது, சீனியர் தெலுங்கு நகைச்சுவை நடிகர்களான குண்டு ஹனுமந்தராவ், போட்டி வீரா ஆகியோர் வறுமையில் வாடுவதை ஒரு டிவி பேட்டியில் அறிந்திருக்கிறார் சிரஞ்சீவி. அதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கத்தில் அவர்களின் விலாசத்தை கேட்டு அறிந்து கொண்டு அவர்களுக்கு தனது சார்பில் தலா ரூ.2 லட்சம் வழங்கியிருக்கிறார்.