போர்ட் எலிசபெத் நகரில் இம்மாத இறுதியில் நடைபெறும் முதல் 4 நாள்கள் டெஸ்ட் போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்க அணியை, ஜிம்பாப்வே அணி எதிர்கொள்கிறது. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் ஜனவரி 5-ல் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான பயிற்சியாக இருக்கும் வகையில், தென்னாப்பிரிக்க அணியில் டிவிலியர்ஸ் மற்றும் ஸ்டெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.
மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் டிவிலியர்ஸ், கடந்த 2016 ஜனவரிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராகும் வகையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஒதுங்கி இருந்த டிவிலியர்ஸ், மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
அதேபோல், காயம் காரணமாக நீண்டகாலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினும் அணிக்குத் திரும்பியுள்ளார். டுபிளசி தலைமையிலான அணியில், ஹசிம் அம்லா, குயிண்டன் டி காக், மோர்னே மோர்கல், வெரோன் பிலாண்டர் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.