நடிகர் ரஜினிகாந்துக்கு கிரக்கெட் ஜாம்பவான் சச்சினி டெண்டுல்கர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,
ரஜினியை சந்திக்க காலைமுதல் சென்னை போயஸ் கார்டன் இல்லத்திலும் ராகவேந்திரா மண்டபத்தின் முன்பும் ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சின் டெண்டுல்கர் ரஜினிகாந்துக்கு டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் உங்களின் 67வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

