பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கியிடம் ரூ. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அவரின் முன்னாள் காதலி சுனிதா ராஜ்வர். பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதினார். அதில் தனது முதல் காதலியான சுனிதா ராஜ்வர் தன்னிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் பிரிந்து சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
பணம் இருக்கும் ஒருவருடன் சுனிதா சென்றுவிட்டதாகவும் புத்தகத்தில் எழுதியுருந்தார் நவாஸ். இதை பார்த்த சுனிதா கோபம் அடைந்து நவாஸை பணத்திற்காக அல்ல அவரின் மோசமான குணத்திற்காக பிரிந்து சென்றதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும் தன் பெயரை கெடுத்ததற்காக ரூ. 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சுனிதா. சுனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நவாஸ் அந்த புத்தகத்தை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். நவாஸின் மற்றொரு முன்னாள் காதலியான நிஹாரிகா சிங்கும் அவர் பொய் சொல்வதாக கூறினார் எனபது குறிப்பிடத்தக்கது.
