பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க மறுத்ததால் ப்ரியங்கா சோப்ராவுக்கு 10 பட வாய்ப்புகள் பறிபோனதாக அவரின் தாய் மது சோப்ரா தெரிவித்துள்ளார். 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு பாலிவுட்டில் அறிமுகமான அவர் அங்கு முன்னணி நடிகையானார். தற்போது ஹாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ப்ரியங்கா பற்றி அவரின் தாய் மது சோப்ரா கூறியதாவது,
ப்ரியங்கா நடிக்க வந்த புதிதில் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அரைகுறை ஆடை அணிய வேண்டும் என்றார்கள். உலக அழகிப் பட்டம் வென்றவரை அழகாக காட்ட வேண்டாமா என்று அந்த இயக்குனர் கேட்டார்.
அநத் இயக்குனரின் படத்தில் இருந்து ப்ரியங்கா வெளியேறினார். இதனால் அந்த இயக்குனர் கோபம் அடைந்தார். ப்ரியங்கா விலகியதால் அவருக்கு 10 பட வாய்ப்புகள் பறிபோனது.
ஒரு முறை கதை சொல்ல வந்தவர் உங்களின் அம்மா அறையை விட்டு வெளியே சென்றால் நல்லது என்றார். என் மகளோ, அம்மா கேட்க முடியாத கதையில் நான் நடிக்க மாட்டேன் என்றார் என மது தெரிவித்தார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வெயின்ஸ்டீன் போன்றவர்கள் ஹாலிவுட்டில் மட்டும் இல்லை அனைத்து இடங்களிலும் உள்ளனர் என ப்ரியங்கா பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

