கடந்த 2015-ல் மலையாளத்தில் வெளியான ஐந்து மெகா ஹிட் படங்களை பட்டியலிட்டால் அதில் ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. நிவின்பாலி ஹீரோவாக நடித்த, மஞ்சிமா மோகன் அறிமுகமான இந்தப்படம் நல்ல வசூலை அள்ளியதுடன் 100 நாட்களையும் தாண்டியது.
ஆனால் இந்த வெற்றிப்படத்தை இயக்கிய ஜி.பிரஜித் இந்த இரண்டு வருடங்களில் தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்யவில்லை. சொல்லப்போனால் இன்னும் இரண்டாவது படத்தை ஆரம்பிக்கவே இல்லை. மோகன்லாலை வைத்து இவர் ‘பென்ஸ் வாசு’ என்கிற படத்தை இயக்குவதாக ஒரு செய்தி வெளியாகி அதுவும் காற்றோடு கலந்து போய்விட்டது.
இப்போது பிஜூமேனனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார் பிரஜித். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்.

