மலையாளம், தமிழ் என செலக்டிவாக படங்களில் நடித்துவரும் நடிகை பார்வதி தற்போது ‘காரிப் காரிப் சிங்கிள்’ என்கிற இந்திப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தில் கதையின் நாயகனாக இர்பான் கான் நடித்துள்ளார். ‘துஷ்மன்’, ‘சங்கர்ஷ்’ ஆகிய படங்களை இயக்கிய தனுஜா சந்திரா இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படம் நேற்று வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களாக மும்பையில் இந்தப்படத்தின் புரமோஷன்களில் கலந்துகொண்ட பார்வதி, நேற்று முதல்நாள் முதல் காட்சியை மும்பையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்தாராம். படத்தில் அவரது நடிப்பிற்கு ஆடியன்ஸிடம் இருந்து கிடைத்த வரவேற்பை பார்த்து பார்வதிக்கு சந்தோஷத்தில் கண்களில் கண்ணீரே வந்துவிட்டதாம்.