ஒளிப்பதிவாளர் ப்ரியன் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் இன்று விக்ரம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”ப்ரியன் மறைவு குறித்த செய்தியை திடீரென்று கேள்விப்பட்டதும் என் துயரத்தை வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. நான் சந்தித்த இனிமையான மனிதர்களில் ப்ரியனும் ஒருவர். அவர் ஒரு மென்மையான மனிதர். அவரது இறப்பு ஒவ்வொருவருக்கும் பேரிழப்பு. ப்ரியனின் ஆன்மா சாந்தியடையட்டும்.
பாலா இயக்கத்தில் துருவ் நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக் டைட்டில் இன்று அறிவிப்பதாக இருந்தது. அதை நாளைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி” என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

