விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளிவருகிறது. இதுகுறித்து பேட்டியளித்த அவர் “சரியான வாய்ப்புகள் இல்லாததால் எடை கூடிவிட்டது. அதனை குறைக்க இப்போது கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்றார் அவர் மேலும் கூறியதாவது:
நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘பாண்டிய நாட்டிற்கு பிறகு சுசீந்திரன் படத்தில் எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்சிப்பூர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. தொண்டன் போன்ற படங்களில் கோவக்காரனை போல் இருக்கும், அதுபோல இல்லாமல் இந்தப்படமும் அடுத்து வரும் வெண்ணிலா கபடி குழுவாக இருக்கட்டும் இரண்டிலும் நகைச்சுவையான விஷயம் இருக்கணும்னு முயற்சி செய்து உள்ளோம்.
நடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடிவிட்டேன். அதனை குறைக்க ஓட ஆரபித்தேன் இப்பொழுதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது. அடுத்து வெண்ணிலா கபடி குழு-2 பண்ணுகிறோம் முதல் பகுதியில் விஷ்ணு இறந்து விடுவார் அவருக்கு பதில் நீ. மற்ற நடிகர்களெல்லாம் அவர்களே தான். படத்தை செல்வசேகரன் இயக்குகிறார். வெண்ணிலா கபடி குழு 2-க்காக கபடி முறையாக கற்று வருகிறேன் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும். என்கிறார் விக்ராந்த்.
