நியூயார்க் மான்ஹாட்டன் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சய்ஃபுல்லோ சாய்போவ் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.சய்ஃபுல்லோ சாய்போவ் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவு
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைக்கு இவர் பொருட்கள் மற்றும் ஆட்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட இந்த நபர் தங்களிடம் சுதந்திரமாக பேசியதாக தெரிவித்த வழக்கறிஞர்கள், காவலில் இருக்கும் தன்மீது சுய பாரபட்சம் கட்டப்படுவதை தவிர்க்க அவர் தனது வலது கையை அவர்களை நோக்கி அசைத்ததாக தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை நடத்த சய்ஃபுல்லோ சாய்போவ் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு இருந்தார் என்று கூறப்படுகிறது.
மேலும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியை அவர் திட்டமிட்டே தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.முன்னதாக, நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சய்ஃபுல்லோ சாய்போவ் நடத்திய டிரக் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய இந்த நபரை, நியூ யார்க் காவல்துறையினர் வயிற்றிற்கு மேல் சுட்டு, கைது செய்துள்ளனர்.
இவர் ஒட்டி வந்த டிரக்கில் இருந்த ஒரு குறிப்பு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு குறித்து குறிப்பிட்டுள்ளதாக சட்ட அமலாக்க பிரிவை சேர்ந்த ஒரு ஆதாரம் சிபிஎஸ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த நியூ யார்க் நகர மேயர் பில் ட பிளாசியோ கூறுகையில், ”அப்பாவி மக்களை குறிவைத்து நடந்த இந்த தாக்குதல் ஒரு கோழைத்தனமான செயல்” என்று கூறியுள்ளார்.
கீழ் மன்ஹாட்டனில் மேற்கு பக்க நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.