ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை சென்னையில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான பயிற்சியின் போது ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஆரோன் பின்ச், வலது கணுக்காலில் காயமடைந்தார்.
இதனால் இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த இந்திய போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான ஒருநாள் பயிற்சி போட்டியில் பங்கேற்கவில்லை.
இவரது காயம் குணமடைய தாமதமாகும் என்பதால், இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இவருக்கு பதிலாக, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், முதல் ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன், அணியில் இணைந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.