பிக்பாஸ் நிகழ்ச்சியால் இந்தளவு புகழ் கிடைக்கும் என ஓவியாவே நினைத்திருக்க மாட்டார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும், இன்னும் அந்த மகிழ்ச்சி கடலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்.
இந்நிலையில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் உடன் அந்த நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதற்கான ஒப்பந்தமும் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சரவணன் ஏற்கெனவே தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.