நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில், சினேகன், சுஜா ஆகியோருக்கு இடையே நடந்த போட்டியில் சினேகன் ஏமாற்றினார் என கூறி அவர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
காரின் ஓரத்தில் அவர் கால் உரசியதற்காக இப்படி செய்தது சரியில்லை என நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
சுஜா, சினேகன் ஆகிய இருவருக்கும் புள்ளிகளைப் பகிர்ந்தளித்திருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
பிக்பாஸ் டீம் :
‘பிக்பாஸ்’ டீம்… நான் அப்செட்டா இருக்கேன். ரெண்டு பேருக்கும் புள்ளிகளை பகிர்ந்தளித்திருக்க வேண்டும்’ என அவர் ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். அவரது கருத்துக்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
நீங்களா இருந்தா… :
நீங்க சுஜா இடத்தில் இருந்திருந்தா ஷேர் பண்ணிருப்பீங்களா… இல்ல ஷேர் பண்ணதான் விட்ருப்பீங்களா
20 மணிநேரம் :
20 மணிநேரம் காருக்குள்ளேயே இருக்குறது ஒண்ணும் சாதாரணம் இல்ல… ரெண்டு பேருமே வெற்றிக்குத் தகுதியானவங்க. ரெண்டு பேருக்கும் சப்போர்ட் பண்ணனும்.
ஓவியா வரணும் :
என்னாங்கயா இது… ஓவியாவை அழைச்சுக்கிட்டு வாங்கப்பா. அவங்க யார சொல்றாங்களோ அவங்கதான் வின்னர்.
குறும்படம் :
சிநேகன்… உங்க கால் கார் மேல பட்டதா இல்லையானு பார்க்க இதோ ஒரு குறும்படம்னு கமல் சொல்லப்போறார் பாருங்க…
இரண்டு பேரும்தான் :
சிநேகன் கீழே வைத்தும் சுஜா மேலே வைத்தும் இருவரும் பேலன்ஸ் பண்ணி இருக்காங்க. சினேகன் short-ஆ இருக்கறதால தெளிவா தெரியுது கணேஷ் இதை கவனிக்கவில்லையா?

