துரையம்மா நடிகை சைடு பிசினஸ் பற்றி சக நடிகைகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறாராம்.
நடிகைகள் பலரும் ரியல் எஸ்டேட், துணிக் கடை, அழகு நிலையம், ஹோட்டல் என்று சைடு பிசினஸ் வைத்துள்ளனர்.
தொடர்ந்து உச்சத்தில் இருக்க முடியாது என்பதால் சம்பாதிக்கும் காலத்தில் அதை தகுந்த முறையில் முதலீடு செய்கிறார்கள்.இந்நிலையில் துரையம்மா நடிகை சைடு பிசினஸில் அதிக கவனம் செலுத்துகிறாராம். சொல்லச் சொல்ல கேட்காமல் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுத்த துரையம்மாவுக்கு தற்போது தமிழில் மார்க்கெட் இல்லை.
பாலிவுட் பக்கமும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான் அவர் தனது சைடு பிசினஸான ரியல் எஸ்டேட்டில் கவனம் செலுத்துகிறாராம். மேலும் சக நடிகைகளுக்கும் சைடு பிசினஸ் ஐடியாக்கள் கொடுக்கிறாராம்.
சென்னை மற்றும் மும்பையில் வீடு வாங்கிப் போட்டுள்ளார் துரையம்மா என்பது குறிப்பிடத்தக்கது.

