பாகிஸ்தானில் நடைபெறும் உலக லெவன் அணிக்கு எதிரான போட்டி பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் நடப்பதற்கான முன்னெடுப்பே தவிர அந்தப் போட்டிகளில் சாரமொன்றுமில்லை என்ற தொனியில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஜாலி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல் போட்டியில் பாகிஸ்தான் 197 ரன்களை எடுக்க, உலக லெவன் அணி 177 ரன்களை எடுத்துத் தோல்வி தழுவியது.
களத்தில் ஆட்டத்தின் சீரியஸ் தன்மையை விட பாகிஸ்தானுக்கு சர்வதேச கிரிக்கெட் மீண்டும் முழு அளவில் திரும்ப வேண்டும் என்ற ரீதியில் நடத்தப்படுவதை ஹர்ஷா போக்ளே ஜாலியாக விமர்சிக்கிறார்.
அவர் தன் ட்வீட்டில் கூறியிருப்பதாவது:
உலக லெவன் அணி போன்ற அணிகளின் சிறப்புத் தன்மை என்னவெனில் அவர்கள் நிறைய கவனத்தை ஈர்ப்பார்கள், ஆனால் எப்போதும் தோற்றுப் போவார்கள்.
இதைக் கூறும் போது இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், உலக லெவன் அணியில் யார் விளையாடுகிறார்கள் என்பதைப் பற்றியதல்ல இந்தத் தொடர், இது பாகிஸ்தனில் கிரிக்கெட் ஆடுவது பற்றியதாகும். என்று ட்வீட் இட்டுள்ளார் ஹர்ஷா போக்ளே.

