கொழும்பு கோட்டையிலிருந்து கடுவெல வரையிலான இலகு ரயில் சேவையொன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கடுவெல -பாராளுமன்ற பிரதான பாதையில் ஏற்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கம் இந்த புதிய ரயில் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பில் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்தில் இதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.