கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவுக்கு உரிமையேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அப்போது இயக்குநர் அமீர் பேசும்போது… ‘நாம் அனைவரும் அனிதாவுக்காக கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் ‘தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்றார்.
ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட இவர்களின் மாறுபட்ட கருத்துகளால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ரஞ்சித்தின் கருத்துக்கு மற்றொரு நிகழ்ச்சியில் அது பற்றி பேசினார் சீமான்.
”ரஞ்சித்தின் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது. அவரின் கோபம், வேதனை, காயங்களும் எல்லோருக்கும் உள்ளது.
சாதியப் புற்று நம் இனத்தை செல்லரித்துக் கொல்கிறது என்பதை மறுக்க முடியாது.
போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்களது தங்கையாகப் பார்க்கிறார்கள். ரஞ்சித் தலித்தாகப் பார்க்கிறார்.
இது அவர் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது.
போராடும் அத்தனை பேரும் தலித் மாணவர்கள்தானா? எல்லா மாணவர்களும் போராடியதுதான் வரலாற்றின் பெரும் மாற்றம்.
இந்த உணர்வைதான் வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார் சீமான்.