ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
ஜடேஜா 2-வது இடத்துக்கு நகர, அஸ்வின் தன் 3-ம் இடத்தைத் தக்கவைத்தார்.
பேட்டிங்கில் புஜாரா 4-ம் இடத்தில் உள்ளார், விராட் கோலி 6-ம் இடத்தில் இருக்கிறார். கே.எல்.ராகுல் 9-ம் இடத்திலும் ரஹானே 10-ம் இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முறையே 2 மற்றும் 3-ம் இடத்தைத் தக்க வைத்துள்ளனர்.