அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரி பிரித்தானியா வாழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
இன்று காலை (9-9-2017) காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அனித்தாவின் மரணத்திற்கு நீதி கோரியும், இந்திய தலைமை அரசை கண்டித்தும் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் இவ் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வல் அனித்தாவின் மரணத்திற்கு மத்திய அரசு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் அத்துடன் இனி வரும் காலங்களில் அனிதா போன்ற மாணவ சமூகங்களை பாதுகாக்க நீட் தேர்வு பரீட்சையினை மத்திய அரசு முற்றாக நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெரும்பாலான இலங்கைத்தமிழர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.