உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனையான சோனம் மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.
கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 56 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் 15 வயதான சோனம் மாலிக், ஜப்பானின் செனா நகமோடோவை எதிர்த்து விளையாடினார். இதில் சோனம் மாலிக் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
43 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் நீலம் 6-4 என்ற கணக்கில் ருமேனியாவின் அலெக்சாண்ட்ராவை வீழ்த்தினார்.

