அமெரிக்கன் ஒப்பன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களுள் ஒருவரான நடால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்துவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்தத் தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓப்பன் தொடர் நடந்துவருகிறது. இப்போட்டித் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரரான ரஃபேல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல், பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர். அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் தனது வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமெரிக்க ஓப்பன் தொடர் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டு அமெரிக்கர்கள் தற்போதுதான் இறுதிப்போட்டியில் மோத உள்ளனர். டென்னிஸ் உலகின் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் பட்டம் வெல்பவர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

