‘நாச்சியார்’ படத்தைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா, மணிரத்னத்தின் பெயரிடப்படாத அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.
‘மகளிர் மட்டும்’ பட வெளியீட்டுக்காக செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிகா இதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஜோதிகா, ”பாலாவின் ‘நாச்சியார்’ படத்துக்கு அடுத்ததாக மணிரத்னம் சாரின் படத்தில் நடிக்க உள்ளேன். இதை அறிவிக்க அனுமதி ற்றுவிட்டேன். ஆனால் அதையும் மீறி எந்தத் தகவலையும் சொல்ல எனக்கு அனுமதி இல்லை” என்றார்.
இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் ஃபாசில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.