இலங்கைத் தொடரை 9-0 என்று முற்றிலும் ஆதிக்கம் செலுத்தி இந்திய அணி வென்றதையடுத்து இலங்கைப் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் இந்திய அணியை உலகின் சிறந்த ரக்பி அணியான “ஆல் பிளாக்ஸ்” அணியுடன் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
“இந்திய அணியைப் பாருங்கள் அது ஆல் பிளாக் அணி போல்தான் உள்ளது. அவர்கள் சமரசமற்ற, கருணையற்ற விதத்தில் ஆடினர். அவர்களது பணிக் கட்டுக்கோப்பு அபாரமானது. மற்ற அணிகள் தாங்கள் எந்த நிலையை அடைய வேண்டும் என்று விரும்புகின்றனரோ அந்த அணியாக இந்திய அணி உள்ளது, இலங்கை அணி தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம் என்றால் அதைவிடவும் முக்கியம் இந்திய அணியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.
விராட் கோலி எப்படி வேகமாக ரன்களை ஓடுகிறார் என்பதைப் பாருங்கள். ஒரு தலைவராக களத்தில் அவருக்குக் கிடைக்கும் மரியாதையைப் பாருங்கள். அவர் ரோல்மாடலாகத் திகழ்கிறார் தன்னுடன் மற்றவர்களையும் இழுத்துச் செல்கிறார். இந்திய அணியினர் செயலாற்றும் விதம் விராட் கோலி அவர்களிடையே ஏற்படுத்தியுள்ள ஒரு கட்டுக்கோப்பு, உழைப்பு கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.