பாகிஸ்தானில் பருவ மழைக்கு 164 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் கனமழை பெய்து வருவதாகவும், இதனால், நுற்றுக்கணக்கான மக்கள் உறைவிடத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக 39 குழைந்தைகள் உட்பட 164 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 167 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 167 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவும் 440 வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பெய்த மழைக்கு 1500 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா அறிக்கையின் படி 2010 ஆம் ஆண்டு 5,57,226 வீடுகள் சேதம் அடைந்தன. 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்தனர் என்று கூறப்படுகிறது.