பிரான்சில் பொதுத் தொலைபேசிப் பெட்டிகளின் (cabines publiphones) வரலாறு முடிவிற்கு வருகின்றது. எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி, பிரான்சில் எஞ்சியுள்ள 5450 பொதுத் தொலைபேசிப் பெட்டிகளையும், ORANGE நிறுவனம் அகற்ற உள்ளது. இவற்றை ஒரு அடையாளமாகப் பேண எண்ணினாலும், இவற்றின் பராமரிப்புச் செலவானது வருடாந்தம் பத்து மில்லியன் யூரோக்களைத் தாண்டுகின்றது என, ORANGE நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் 2000 ஆண்டளவில் இந்தப் பொதுத் தொலைபேசிப் பெட்டிகள் மூலம் வருடாந்தம் 516 மில்லியன் யூரோக்கள் வருமானம் வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் 2012 இற்கும் 2015 இற்கும் இடையில் இந்த வருமானம் 90% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இதன் பராமரப்புச் செலவீனம் அளவிற்குக் கூட வருமானம் இல்லாததால், இது பெரும் நட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனாலேயே இந்தப் பொதுத் தொலைபேசிப் பெட்டிகளின் வரலாறு புதைக்கப்பட உள்ளது.
பிரான்சில் பொதுத் தொலைபேசிப் பெட்டிகள் 1883 ஆம் ஆண்டில் முதல் முதலாக நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஒன்ரறை நூற்றாண்டின் சேவை இன்று செல்பேசிகளினால் அழிக்கப்பட்டுள்ளது.