பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் பிக் பாஸ் என்ற ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார், இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் ஒட்டு மொத்த பிக் பாஸ் குடும்பத்தினரும் கதறி அழுகின்றனர், சினேகன் அப்பா அப்பா என கதறி அழுகிறார். அவர் அவ்வாறு கதற, நடந்தது என்ன?ப்ரோமோவில் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பில் என்ற பாடல் ஒலிக்கிறது,
இதனால் நடந்தது என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏதோ ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது என்றே தெரிகிறது..
ஏன் அனைவரும் அழுதார்கள்? நடந்தது என்ன? என்பது இன்று இரவு தான் உறுதியாக தெரிய வரும்.
ஒரு வேளை இதுவும் ஒரு டாஸ்க்காக இருக்குமோ என்று நினைக்கும் ரசிகர்கள் சிலர், யார் பெஸ்டாக அழுகிறார்கள் என்பதை கணிக்க பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கா என சிந்திக்கும் சிலர்..
மக்கள் சுவாரஸ்யங்களை விரும்புகின்றனர் என்பதை நன்றாகவே உணர்ந்த பிக்பாஸ்,சுவாரஸ்யங்களை கொண்டுவர தினம் தினம் அரங்கேற்றும் ஸ்கிரிப்ட் இல்லாத நாடகங்கள்..
இந்த புகைப்படத்தில் இருப்பது, சினேகனின் தந்தை ஆவார்.. இந்த புகைப்படம் பிக்பாஸ் வீட்டில் எடுக்கப்பட்டது போல இல்லை. எதோ ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் இருவரும் அமர்ந்திருப்பது போல உள்ளது.
ஒருவேளை சினேகன் தனது சொந்த ஊருக்கு பிக்பாஸ்-ன் அனுமதியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிசென்றுவிட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.