Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

வார்னரின் மிக மெதுவான சதத்துடன் ஆஸ்திரேலிய அணி முன்னிலை

September 6, 2017
in Sports
0
வார்னரின் மிக மெதுவான சதத்துடன் ஆஸ்திரேலிய அணி முன்னிலை

சிட்டகாங் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்து 72 ரன்கள் என்ற ஓரளவுக்கு வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது.

போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடிக்கப்பட்ட போது ஓ’கீஃப் 8 ரன்களுடனும், நேதன் லயன் ரன் எடுக்காமலும் இருந்தனர்.

டேவிட் வார்னர் தன் வாழ்நாளின் ஆகமெதுவான சதத்தை எடுத்தார், 209 பந்துகளில் சதமடித்த வார்னர் பிறகு 234 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்து முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய கட் ஸ்விங் ஷார்ட் பிட்ச் பந்திற்கு கல்லியில் இம்ருல் கயேஸிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், தட்டித் தட்டி எப்படி கேட்ச் பிடிக்கக்கூடாது என்பதை வங்கதேச பீல்டர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்! சவுமியா சர்க்கார் கடந்த போட்டியில் கேட்ச்களைத் தட்டித்தட்டியே பிடித்தார், இம்ருல் கயேஸ் இன்று தட்டிதட்டிப் பிடித்தார். மொத்தத்தில் கேட்ச்கள் வந்தால் வங்கதேச வீர்ர்கள் பதற்றமடைகின்றனர் என்று புரிகிறது.

இன்று காலை தொடங்கும் போது 4-வது இன்னிங்ஸை ஆடாத அளவுக்கு முன்னிலை பெறும் முனைப்புடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா ஆனால் ஹேண்ட்ஸ்கம்ப், வார்னர் வெளியேற்றத்துக்குப் பிறகு வங்கதேசம் மளமளவென விக்கெட்டுகளைச் சாய்த்ததில் ஒரு பதற்றமான 4-வது இன்னிங்ஸ் விரட்டலை ஆஸ்திரேலியா சந்திக்க நேரிட்டுள்ளது. இன்று மழை காரணமாக ஆட்டம் 2 மணி நேரம் நடைபெறவில்லை.

ஹேண்ட்ஸ்கம்பின் அருமையான இன்னிங்ஸ் அவர் 82 ரன்களில் இருந்த போது முடிவுக்கு வந்தது, வார்னர் சதம் அடிப்பதற்காக ஓடி வந்தவர் வார்னர் நோ என்றவுடன் திரும்ப வேண்டியிருந்தது ஷாகிப் அல் ஹசன் நேரடியாக ஸ்டம்பைக் குறிவைத்தார்.

ஷாகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் மிராஸ் இருவரும் காலடித் தடங்களை நன்றாகப் பயன்படுத்தினர். பந்துகள் அவ்விடத்தில் பிட்ச் ஆனால் கடுமையாகத் திரும்பியது.

ஹேண்ட்ஸ்கம்ப், வார்னர் இணைந்து 152 ரன்களை கடினமான சூழலில் சேர்த்ததே ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய முன்னிலைக்குக் காரணமாக அமைந்தது. மேக்ஸ்வெல், கார்ட்ரைட் இணைந்து மேலும் ஒரு கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பொது கார்ட்ரைட் 18 ரன்களில் தேநீர் இடைவேளைக்கு சற்று முன் மெஹதி ஹசன் மிராஸ் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். மேத்யூ வேட் தனது இடத்தை இழப்பது உறுதியாகியுள்ளது, இன்றும் சோபிக்க முடியாமல் முஸ்தபிசுர் ரஹ்மானின் இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆனார்.

கிளென் மேக்ஸ்வெல் 98 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் பந்தை ஆடும்போது பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பேடில் பட்டு எழும்ப முஷ்பிகுர் ரஹிம் முன்னால் பாய்ந்து கேட்ச் எடுத்தார், இரண்டு டிவி ரிப்ளேக்குப் பிறகு அவுட் கொடுக்கப்பட்டது. கமின்ஸ் மெஹதி ஹசன் பந்தில் 4 ரன்களுகு எல்.பி.ஆனார். ஆகர் 22 ரன்கள் எடுத்து நன்றாக ஆடி வந்த போது ஷாகிப் பந்தில் பவுல்டு ஆனார்.

வங்கதேச அணியில் மெஹதி ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷாகிப், தைஜுல் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர், ஆஸ்திரேலியா அணி இன்னும் ஒருவிக்கெட் மீதமிருக்க 3-ம் நாள் ஆட்ட முடிவில் 72 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Previous Post

அரை இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்: ஆடவர் பிரிவில் கெவின் ஆண்டர்சனும் தகுதி

Next Post

அமெரிக்க ஓப்பன் அரையிறுதியில் ஃபெடரர்- நடால் மோதும் வாய்ப்பு!

Next Post
அமெரிக்க ஓப்பன் அரையிறுதியில் ஃபெடரர்- நடால் மோதும் வாய்ப்பு!

அமெரிக்க ஓப்பன் அரையிறுதியில் ஃபெடரர்- நடால் மோதும் வாய்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures