நீட் தேர்வு அறிமுகம் செய்ததில் இருந்து தமிழ்நாட்டில் நிறைய எதிர்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. கிராமப்புற மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இந்த முடிவில் இருந்து மத்திய அரசும், மாநில அரசும் முன்னுக்குப் பின் முரணாகிப் பேசிவந்தன. இந்த நிலையில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது. இந்த நிலையில் +2-வில் 1176 மதிப்பெண்கள் வாங்கியும் மருத்துவ சீட் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் தற்கொலை செய்திருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த அனிதா. இதனை அறிந்த பிரபலங்கள் பலரும் தங்களது கோபத்தை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.