இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விராட்கோலியின் விக்கெட் எடுத்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளார். கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கினர்.
இந்நிலையில் 4 எடுத்த நிலையில் தவான் விஸ்வா பெர்ணான்டோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். விராட் கோலி 131 ரன்கள் எடுத்திருந்த போது மலிங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் மலிங்காவிற்கு 300-வது விக்கெட்டாகும். லசித் மலிங்கா இதுவரை 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்து வீச்சில் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்ததே அவரின் சிறப்பான பந்து வீசசாகும்.
