ஜிஎஸ்டி வரி மூலம் ஜூலை மாதத்தில் மட்டும் ரூ92,283 வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அருண்ஜேட்லி கூறியதாவது:ஜி.எஸ்.டி வரியின் கீழ் ரூ91,000 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரூ92,283 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இந்த மாதம் 25-ந் தேதி வரை 59.57 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வரி செலுத்தியோர் எண்ணிக்கை 59. 57 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 72.33 லட்சம் பேர். ஜூலையில் மட்டும் ரூ 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அருண்ஜேட்லி கூறினார்.