நடிகர் அஜித்குமார் நடித்துள்ள விவேகம் திரைப்படத்தை காரைக்கால் தியேட்டரில் பார்த்து கொண்டிருந்த ரசிகர் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கிளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சபுருதீன் (31). வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அஜித் நடித்த விவேகம் திரைப்படம் நேற்று ரிலீசானது. இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரைக்காலில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றுள்ளார்.
முதலில் படத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று சபுரூதீனுக்கு மயக்கம் ஏற்பட்டு, இருக்கையிலிருந்து கீழே சுருண்டு விழுந்துள்ளார்.
இதனை கண்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவத்தை கேட்ட நண்பர்கள் கதறி அழுதனர். ஒரு ரசிகர் திடீரென்று இறந்த சம்பவம் அஜித் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாபக சபுரூதீன் மனைவி ஆலம் முனிராபேகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
