பிரபல கணித ஜீனியஸ் ஆனந்த் குமார் வாழ்க்கை பாலிவுட்டில் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் ஆனந்த் குமார் வேடத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. சமீபத்தில் செய்தியாளர்களுடான சந்திப்பின் போது இதை உறுதி செய்துள்ளார் ஹிருத்திக்.
இதுகுறித்து ஹிருத்திக் கூறுகையில், சமீபத்தில் ஆனந்த் குமாரை சந்தித்தேன், அருமையான நபர், சினிமா தவிர்த்து அவரிடம் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன். அவரும் அவருடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை என்னும் பகிர்ந்தார். எங்களுக்கு இடையேயான சந்திப்பு அருமையாக இருந்தது. அவரது படத்தில் நடிக்க ஆவலாய் உள்ளேன் என்றார்.
ஆனந்த் குமார் வாழ்க்கை, சூப்பர் 30 என்ற பெயரில் சினிமாவாக உருவாக உள்ளது. இப்படத்தை விகாஷ் பகல் இயக்க உள்ளார்.
