கமலை வைத்து கெளதம்மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. அதையடுத்து தற்போது விக்ரமை வைத்து இயக்கி வரும் துருவநட்சத்திரம் படத்தையும் அமெரிக்காவில் சில காட்சிகளை படமாக்கினார்.
தற்போது துருக்கி, அபுதாபி உள்ளிட்ட சில நாடுகளில் லொகேசன் பார்த்து வந்து படப்பிடிப்பை முடுக்கி விட்டிருக்கிறார் கெளதம் மேனன். விக்ரம் அடுத்தபடியாக சாமி-2 நடிக்க இருப்பதால் வேகமாக இப்படத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கெளதமேனன்.
அதன்காரணமாக துருக்கி, அபுதாபியில் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்தி விடப்போகிறாராம் கெளதம்மேனன். ஏற்கனவே 50 சதவிகிதம் வசன காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சண்டை மற்றும் பாடல் காட்சிகள் துருக்கியில் படமாகிறதாம்.
