இங்கிலாந்தில் வரும் 2019ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு இப்போதே தயாராகும் வகையில் இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணியில் மூத்த வீரராக முன்னாள் கேப்டன் டோனி உள்ளார். 36 வயதான அவர் 2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது டோனிக்கு உத்வேகம் அளிக்கும் என கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து , இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணிலும், தென்ஆப்ரிக்காவிலும் விளையாட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இந்தியா தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் உலக கோப்பைக்கு மிகச்சிறந்த வீரர்களை தேர்வு செய்ய முடியும்.
தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகள் இருப்பது டெஸ்ட்டில் ஆடாத டோனி உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும். பாண்டியா 135கி. மீ வேகத்தில் பந்து வீசுகிறார்.
இதனால் அவரை முதல் பவர்பிளேவில் 5 ஓவர்கள் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். அவரது உயரத்தால் கூடுதலாக பவுன்சர்களை வீச முடியும்.
நாங்கள் ஒரு அணியாக இணைந்து செயல்படுகிறோம்.
தனிப்பட்டமுறையில் செல்படாமல் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆடுகிறோம், என்றார்.
