விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் ஹீரோவாகி வெற்றியும் பெற்று வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மீசையை முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியும் ஹீரோவானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த வரிசையில், அடுத்தபடியாக அனிருத் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டி.இமான் விரைவில் ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. மேலும், உடல் பெருத்து காணப்பட்ட டி.இமான் சமீபகாலமாய் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சி கொடுக்கிறார். அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மானது ஹீரோவாக நடிப்பதற்காகத்தான் என்பது இப்போதுதான் தெரிகிறது. அப்படி டி.இமான் நடிக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

