சென்னையில் கல்லூரி மாணவர்கள் பைக் ரேஸால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒண்டிக்குப்பத்தில் மாணவர்களின் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் உயிரிழந்தார். ரேஸ் சென்று விபத்தை ஏற்படுத்திய மாணவர்கள் மது போதையில் இருந்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் விஜய் மற்றும் சீனிவாசன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.