Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‛பிக் பாஸ்ல் இருந்து நானாக வெளியேறினேனா?: கலக்கும் கஞ்சா கருப்பு

July 23, 2017
in Cinema
0

அண்ணே சவுக்கியமாண்ணே என்ற யதார்த்த பேச்சால், நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரையை பதித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. 300 சினிமாக்களை தொட இருக்கும் நிலையிலும் யாரையும் மரியாதையாக வாங்கண்ணே! என்ன சொல்லுதீங்கண்ணே! என்ற வஞ்சனையில்லா வார்த்தை உச்சரிப்புகளால் யாரையும் வசப்படுத்தும் திறமைமிக்கவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை இருப்பார் என்ற நிலையில் மூன்றாவது ஆளாக வெளியேறிய கஞ்சா கருப்பு, சொந்த ஊர் சிவகங்கை கட்டாணிப்பட்டிக்கு அம்மாவை பார்க்க வந்திருந்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது…

படவாய்ப்பு இல்லாததால் பிக் பாஸ் சென்றீர்களா ?

என்னண்ணே சொல்லுதீங்க… வெண்ணிலா கபடி குழு 2, சந்தனத்தேவன், கிடா விருந்து என படங்கள் போயிட்டு இருக்குண்ணே. பார்க்கனும் போலிருக்கு படம் கூட சமீபத்தில் வெளியாயிருக்கு… நிறைய படங்கள் கையில் இருக்குண்ணே.

பிக் பாஸிலிருந்து வெளியே வந்தீட்டீங்களே?

ஏதோ நான் வெளியே வந்த மாதிரி பேசுறாங்க. ஓட்டுக்கள் சேரலை என வெளியே அனுப்பிட்டாங்க. நான் வந்ததை மக்கள் தெளிவா கேட்டு வருகிறார்கள். கணேஷ்வெங்கட்ராம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? ஜூலி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என ஏதோ ஒரு நம்பரை கொடுத்து மக்களிடம் கேட்கிறார்கள். மக்கள் யாரும் எனக்கு ஓட்டு போடலை எனக் கூறி வெளியில் அனுப்பிடாங்க. களங்கமில்லா மனிதனான என்னை வெளியில் அனுப்பிட்டாங்கன்னு மக்கள் பேசிக்கிறாங்க.

உங்களுக்கு ஓட்டுக்கள் கிடைத்திருக்காதா?

எனக்கு நம்பிக்கையில்லை. மக்கள் என் மீது பாசம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். வெளியில் வந்ததிலிருந்து நிறைய பேர் பேச முயற்சிக்கின்றனர்.

நடிகர் கமல் எதுவும் கூறினாரா?

அவர் அவரு வேலையை பார்க்க வந்திருக்காரு… நான் என் வேலையை பார்க்க போயிருக்கேன். இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது.

குடும்பத்தை பிரிந்தது?

இது ஒன்னும் பெரிசா படவில்லை. சினிமா சந்தர்ப்பத்திற்காக சென்னைக்கு பாலா அண்ணன், அமீர் அண்ணன் அலுவலகத்திற்கு போவேன். அவங்க ஏதாவது விஷயமாக என்னை மதுரை அனுப்புவாங்க. இரவு புறப்பட்டு மறுநாள் காலை மதுரை வந்து, அவங்க வேலையை முடித்துட்டு அன்றிரவே சென்னைக்கு சென்று விடுவேன். இப்ப எல்லாம் வீட்டுல இருக்குற நாட்கள் குறைவு தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கற்று கொடுத்த பாடம்?

நல்ல பழக்கவழக்கங்களை கத்துகிட்டேண்ணே… என் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு இருக்குண்ணே. என் மனைவி, குழந்தைகளை அம்மாவை நம்பி விட்டுட்டு போயிடுவேன். பொதுவாக நான் எல்லோரிடமும் நெருங்கி பழகிவிடுவேன். யாரையும் எதிரியாக நினைத்தது கூட இல்லை.

நடிகர் பரணியுடன் என்ன தான் பிரச்னை?

நுாறு நாள் கழித்து நமீதா, காய்த்ரி, ரைஸ்ஷா, வையாபுரி, சினேகன், சக்தி வாக்குமூலம் கொடுப்பார்கள். அப்ப நான் நல்லவனா இல்லையா என தெரிய வருமுண்ணே…

தனி வீட்டில் இருந்தது?

உள்ளே பெண்களுக்கு பூந்தோட்ட காவல்காரனாக இருந்துள்ளேன். யாரையும் யாருடனும் பேச விட மாட்டேன். இந்த நேரத்தில் இங்கு என்ன நீக்கிறீங்கன்னு, என கேட்டு அனுப்பி வைப்பேன். ஆனால் பரணி நின்னு யாருடனாவது பேசிக்கிட்டு இருப்பார்.

மருத்துவமனை கட்டும் லட்சியம்?

நான் நினைத்தது எங்கண்ணே நடந்திருக்கு… பள்ளி கட்டடம் கட்ட ஆசைப்பட்டேன். நடக்கலை. மருத்துவமனை கட்ட ஆசைப்பட்டேன். ஆனால் நான் வணங்கிற பழநிமுருகன், காளியாத்தா, சமயபுரத்தா இதற்கு ஒரு நாள் வழிவகுப்பாங்கண்ணே.

Previous Post

சூர்யா பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்!!

Next Post

இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!

Next Post
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!

இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026
புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

July 13, 2026
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures