Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

சீனப் பெருஞ் சுவரை விட இலங்கையின் ஊழல் மோசடி வலையமைப்பு பெரியது | பல உண்மைகளை அம்பலப்படுத்தினார் அநுரகுமார

May 4, 2022
in Sri Lanka News
0
அதிபர் – ஆசிரியர்களுக்காக 64 பில்லியனை வழங்க முடியாதா? | ஜே.வி.பி. கேள்வி

சீன பெரும் சுவரை விட இலங்கையின் ஊழல் மோசடி வலையமைப்பு பெரியது. எனவே தான் நாடு ஏழ்மையில் இருக்கையில் ஆட்சியாளர்கள் செழிப்பாக உள்ளனர்.

சி.ஐ.ஏ அதிகாரிக்கு 6.5 மில்லியன் கொடுத்தமைக்காக அஜித் நிவாட் கப்ராலை சிறையிலிட வேண்டும் என தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, பெரும் புள்ளிகளின் மோசடிகளை 500 க்கும் மேற்பட்ட ஆவண கோப்புகளை கொண்ட ஆதாரங்களுடன வெளிப்படுத்தினார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போதே இவ்வாறு ஆதாரங்களை வெளியிட்டு உரையாற்றிய அநுர குமார திசாநாயக, அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

நாடு பொருளாதார ரீதியில் பாரியதொரு ஆபத்தை நோக்கி செல்கிறது. அந்நிய செலாவணி இருப்பு சூன்யமாகியுள்ளது. சர்வதேச கடன்களை செலுத்த முடியவில்லை.

இவ்வாறானதொரு பாரிய பொருளதார நெருக்கடிக்கு பிரதானமான காரணம் மக்களின் நிதியை ஆட்சியாளர்கள் காலாகாலமாக கொள்ளையிட்டமையாகும். இதனால் தான் இன்று நாடு ஏழ்மையிலும் ஆட்சியாளர்கள் செழிப்பாகவும் உள்ளனர்.

எவ்வாறாயினும் நாட்டின் பெரும் புள்ளிகள் பலரின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்த பல்வேறு வகையில் ஒத்துழைப்புகளை வழங்கிய அரச அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஏனெனில இந்த அதிகாரிகள் எம் மீது நம்பிக்கை வைத்தது மாத்திரமன்றி நாட்டு மக்கள் உண்மைகளை அறிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே எமக்கு பல இரகசிய ஆவணங்களை வழங்கினர்.

அதேபோன்று நாம் வெளிப்படுத்திய பல மோசடிகள் இன்று சர்வதேச அரங்கிலும் விசாரிக்கப்பட்டு நிரூபனமாகியுள்ளது. உதாரணமாக ஜாலிய விக்கிரமசூரிய விவகாரத்தை நாட்டிற்கு அம்பலப்படுத்தினோம். இவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர்.

அமெரிக்காவில் இலங்கை தூதுவராக பணியாற்றிய காலப்பகுதியில் தூதுரக நிர்மான பணிக்காக 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒத்துக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் 3.3 மில்லியன் டொலரை மோசடி செய்துள்ளார்.

இது குறித்த வழக்கு அமெரிக்க நீதி மன்றில் இடம்பெற்ற நிலையில் ஜாலிய விக்கிரமசூரிய குற்றத்தை ஒப்புக்கொண்டார். எமது நாட்டின் நிதி மோசடி செய்தமை இன்று முழு உலகமும் அறிந்துள்ளது.

பஷில் ராஜபக்ஷவின் நிதி திருக்குமார் நடேசனிடம் இருப்பதாகவும் அவரே பஷிலின் பிணாமி என்றும் கூறி வந்தோம். பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் ஊடாக அதுவும் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று தான் கிங்னில்வலா மோசடியும். 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி 100 மில்லியன் நிதி சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. அதே வாரத்தில் 2009 மல்லியன் மற்றும் 1003 மில்லியின் நிதி ஓரிரு தினங்கள் வித்தியாசத்தில் அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தமாக 4100 மில்லியன் வரை நிதி கைமாறப்பட்டது. இந்த நிதி நீர்ப்பாச அமைச்சு ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த நிதி ஹொங்கொங் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டு மீண்டும் இலங்கையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள திருக்குமார் நடேசனின் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக முழு ஆவணங்களும் எம் வசம் உள்ளன.

மற்றுமொரு பாரிய மோசடியாக பிரான்ஸ் ஏயார் பஸ் நிறுவனத்துடனான விமான கொள்வனவு ஒப்பந்தம் காணப்படுகின்றது. இந்த ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல் சமல் ராஜபக்ஷ சபாநாயகராக இருந்த போது அவரது உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

14 விமானங்களை கொள்வனவு செய்ய 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் பேசப்பட்டது. இதில் 16.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சப்பணமாக கைமாற்ற திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் ஒப்பந்தம் நெருக்கடியை சந்தித்த நிலையில் 2 மில்லியன் டொலர்கள் மாத்திரம் கைமாறியுள்ளது.

மறுப்பும் இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய 115 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது. இவை அனைத்துக்கும் ஆதரம் எம்மிடம் இருப்பதுடன் லண்டன் நீதிமன்றில் வழக்கும் முன்னெடுக்கப்பட்டது.

சொத்து குவிப்பு தொடர்பில் சி.ஐ.ஏ அதிகாரி ஒருவரை அமெரிக்கா கைது செய்து வழக்கு விசாரணைகளை முன்னெடுத்திருந்து. இவருக்கு எதிராக குற்றம் யாதெனில் குறிப்பிட்ட வருமானத்திற்கான மூலங்கள் குறித்த சந்தேகங்களாகும்.

இறுதியாக 12 வருட சிறைத்தண்டனைக்கு குறித்த சி.ஐ.ஏ அதிகாரி உள்ளானார். இந்த விசாரணைகளின் போது இலங்கை மத்திய வங்கியிலிருந்து 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறித்த சி.ஐ.ஏ அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அப்போதைய ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ரால் வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் இலங்கையின் பிம்பத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதற்காகவே அஜித் நிவாட் கப்ராலை சிறையிலடைக்க வேண்டும். இவ்வாறு பல முக்கிய புள்ளிகளின் மோசடிகளை பெயர் விபரத்துடன் வெளிப்படுத்தியுள்ளோம்.

மிக் விமான மோசடி, சீனி மோசடி, எவன்காட் மோசடி மற்றும் கலாசார நிதி மோசடி என பலவற்றையும் வெளிப்படுத்தியுள்ளோம். மக்கள் இவற்றை அறிய வேண்டும். நேர்மையான ஆட்சி நாட்டில் ஏற்படாத வரையில் மோசடிகளை ஒழிக்க இயலாது.

குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களையும் முறைப்பாடு செய்தவர்களுமே தண்டிக்கப்படுகிறார். இந்த நிலை மாற வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

Previous Post

ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் மைத்திரி

Next Post

‘உலகநாயகன்’ கமல்ஹாசனின் விக்ரம் பட ஓடியோ வெளியீட்டு திகதி அறிவிப்பு

Next Post
விக்ரம் படத்தில் இணைந்த மாஸ்டர் பட நடிகர்

'உலகநாயகன்' கமல்ஹாசனின் விக்ரம் பட ஓடியோ வெளியீட்டு திகதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures