விஜய் சேதுபதி – த்ரிஷா முதன்முறையாக நடித்துள்ள படம் 96. ஒளிப்பதிவாளர் பிரேம் குமார், இப்படத்தை இயக்கி உள்ளார். வித்தியாசமான காதல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது. மெட்ராஸ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று(ஆக., 24) படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியிடப்பட்டது. டிரைலர் வெளியான ஒரு மணிநேத்திலேயே 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.
இதேப்போன்று சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா கமாராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் வெளியான 24 மணிநேரத்தில் 10 லட்சம் பார்கள் கிடைத்தன.

