அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மார்க் அஸே என்னும் 57 வயதுடைய மனிதர் கடந்த 1987ம் ஆண்டு நிற வெறி காரணமாக கருப்பினத்தவர்கள் இரண்டுபேரை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.
இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட மார்க் அசேக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் பல காரணங்களால் தள்ளிப்போன மரண தண்டனை இவருக்கு 30 வருட கால சிறைத்தண்டனையையும் பெற்றுக்கொடுத்தது.
தற்போது இவரின் 57 வயதில் விஷ ஊசி செலுத்தப்பட்டு இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
விஷ ஊசி செலுத்துவதற்கு முன்பு கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என மார்க் அஸேயிடம் கேட்ட போது சொல்வதற்கு எதுவுமில்லை என பதிலளித்துள்ளார்.
இதையடுத்து விஷ ஊசி செலுத்திய சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.