பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த சாஹோ படம் ஹிந்தியில் 153 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் நேற்று வெளியிட்டது. மூன்று வாரங்களில் இந்த வசூலைக் கடந்து இந்தப் படம் ஹிந்தியில் லாபத்தையும் கொடுத்துள்ளதாம்.
இந்த வசூல் நிலவரத்துடன் இந்த வருடத்தில் ஹிந்தியில் அதிக லாபத்தைக் கொடுத்த படங்களின் டாப் 10 பட்டியலில் இணைந்துள்ளது சாஹோ. இந்த வருடத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் உரி, கபீர் சிங், மிஷன் மங்கல், கேசரி ஆகிய படங்கள் 150 கோடி வசூலைக் கடந்துள்ள படங்கள். இவற்றில் கபீர் சிங் படம் 60 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு 280 கோடி வசூலைக் கொடுத்துள்ளது.
சாஹோ படத்தின் ஹிந்தி உரிமை 70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வசூல் 153 கோடியைக் கடந்துள்ளது. பிரபாஸின் முதல் நேரடி ஹிந்திப் படமே அவரை 100 கோடி கிளப்பில் இணைத்துவிட்டது.

