பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு தினங்களாக ஷெரினுக்கு கவின் டார்ச்சர் கொடுத்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. எப்படியாவது நேரடியாக பைனலுக்கு போய்விட வேண்டும் என போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
ஆனால் கவின் மட்டும் வழக்கம் போல் கடலை விவசாயம் பார்த்து வருகிறார். இதுவரை லாஸ்லியாவிடம் கடலை போட்டு வந்த அவர், தற்பொது ஷெரின் பக்கம் திரும்பியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஷெரின் எங்கு சென்றாலும், அங்கு போய் நின்ற அவருடன் வாண்டடாக பேச்சு கொடுக்கிறார்.
ஷெரினை பாத்ரூம் வரை துரத்தி சென்று வம்பிழுத்தார். கவினின் இந்த நடவடிக்கையால் ஷெரின் கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார். கவினை பார்த்து ஏன் இப்டி பண்றே என அவர் கேட்கவே செய்துவிட்டார். ஆனால் அப்போதும் கவின் தனது செயலை நிறுத்தவில்லை.
கவின் ஏன் திடீரென ஷெரின் பக்கம் திரும்பியிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. ஒருவேளை லாஸ்லியாவை வெறுப்பேற்றுவதறக்காகவா அல்லது ஏதேனும் சீக்ரெட் டாஸ்க்காக இருக்குமா என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
															
