மும்பைக்கு எதிரான தோல்வியால், பெங்களூர் கேப்டன் கோஹ்லி சோகமாக காணப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில், அதிக ரன்கள் குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி, விராட் கோஹ்லி வசம் நேற்று வந்தது.
அவர் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி, 201 ரன்களை குவித்துள்ளார். எனினும் ஆரஞ்சு தொப்பி வாங்கியதை அவர் கொண்டாடியதாக தெரியவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’தற்போது ஆரஞ்சு தொப்பி அணிந்திருப்பது போல் நான் உணரவில்லை. உண்மையில், ஆரஞ்சு தொப்பி என்பது ஒரு விஷயமே அல்ல.
வெற்றிதான் தேவை. எங்களுக்கு மிக சிறப்பான தொடக்கம் கிடைத்தது.
ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாமல், வெறுமனே தூக்கி எறிந்து விட்டோம். எனினும் சிறப்பாக பந்து வீசிய மும்பைக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
எங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. நாங்கள் நினைத்தபடி நல்ல ஏரியாக்களில்தான் பந்து வீசினோம்.