சட்டத்தரணி காலிங்க ரவிந்திரவின் ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி மேன்முறையீட்டு மனு, புலிகள் அமைப்பின் ஏவுகணைப் படையணியின் முன்னாள் உறுப்பினரான புலவன் என்றழைக்கப்படும் இராசதுரை ஜெகன் சார்பிலேயே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி, பலாலியிலிருந்து இரத்மலானைக்குப் பறந்து கொண்டிருந்த அன்டனோவ்-32, வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை தாக்குதலில் தலாவ வீரவெவ பிரதேத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதனால், ரஷ்ய விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் பலியாகினர். இந்த வழக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஏவுகணைப் படையணியின் முன்னாள் உறுப்பினர்களான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவருக்கு எதிராகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
