வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வட சென்னை. மூன்று பாகங்களாக உருவாகயிருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் தனுஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, கிஷோர், சமுத்திரகனி, அமீர் உள்பட பலர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கேங்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள வட சென்னை படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதையடுத்து தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள, மாடில நிக்குற மானு குட்டி என்ற பாடலின் டீசர் வெளியாகி உள்ளது.