சைப் அலிகான் நடிப்பில் ஏற்கனவே ரேஸ், ரேஸ் 2 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்போது சல்மான் நடிப்பில் ரேஸ் 3 உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அந்த செய்தி இப்போது உறுதியாகியிருக்கிறது. கார் ரேஸை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதுகுறித்து ஜாக்குலின் கூறியிருப்பதாவது… “ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து தருணின் டிரைவ் படத்தில் நடிக்கிறேன். அடுத்தப்படியாக சுஷாந்த் சிங் ராஜ் புட் படம், அடுத்து சல்மான் உடன் ரேஸ் 3 படத்தில் நடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ரேஸ் 3 படத்தை ரெமோ டிசோசா இயக்குகிறார். ரமேஷ் தருணானி தயாரிக்கிறார். இது ஒரு பக்கா ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது.

