அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். அப்பா மகன் என இரண்டு வேடங்களில் அவர் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் இசைவிழா நாளை(செப்.,19) சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதற்காக தமிழக மெங்கிலும் இருந்து விஜய் ரசிகர்களை சென்னையை நோக்கி படையெடுக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் முதன்முதலாக ‛வெறித்தனம்…’ என்ற பாடலை பாடியிருக்கிறார் விஜய். விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கத்தில் இந்த இசைவிழாவின் போது, ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பிகில் படத்தின் அனைத்து பாடல்களும் பாடப்படுகிறது. முக்கியமாக தான் பாடியுள்ள வெறித்தனம் பாடலை விஜய் மேடையில் தோன்றி பாட இருப்பதாக தகவல்.

